விவசாயிகள் எண்ணிக்கை 11% சரிவு

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 11 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இத்தகைய சரிவு ஏற்பட்டுள்ளதாக தொழில் சம்மேளனங்களின் கூட்டமைப்பான அசோசேம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தொழில்கள் மற்றும் சுய தொழில் மற்றும் பொதுவான வேலையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த பணிகளில் தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக பணி புரிவோர் எண்ணிக்கை 1999-2000 மற்றும் 2011-12 ஆகிய காலத்துக்கு இடையிலான காலத்தில் 60 சதவீதமாக இருந்தது 49 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அசோசேம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தொழில்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை 16 சதவீதத்திலிருந்து 23.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமப்புற வேலைகளில் அடிப்படையிலேயே பெருத்த மாறுதல் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
கிராமப்புற வேலை அமைப்பில் ஏற்பட்டுள்ள மாறுதல் எதிர்காலத்திலும் தொடரும் என்றும் தனியார் மற்றும் அரசு முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. அதேசமயம் வேளாண் சார்ந்த முதலீடுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிக்கை எச்சரித்துள்ளது.
வேளாண் சார்ந்த தொழிலை நம்பியிருக்காமல் அது சார்ந்த பிற தொழில்களை கையகப்படுத்துவது தொழில் புரிவது, வர்த்தகம் மற்றும் சேவைத்துறையில் இறங்குவது ஆகிய நடவடிக்கைகளும் கிராமப்பகுதியில் அதிகரிக்கும். அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்கச் செய்வதன் மூலம்
அது தேசிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அசோசேம் பொதுச் செயலர் டி.எஸ். ரவாத் கூறினார்.
வேளாண் சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்த தனி நபர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் 26 கோடியாக இருந்த தனி நபர் எண்ணிக்கை 23 கோடியாகக் குறைந்துவிட்டது.
உற்பத்தித் துறையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 5.5 கோடியிலிருந்து 6.6 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள் ளவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. அதேபோல சேவைத் துறையில் ஈடுபட்டிருப்போர் எண்ணிக்கை 1.70 கோடியாக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Comments