3,000 ஏடிஎம்கள்: இந்தியா போஸ்ட் திட்டம்

தபால்துறையின் அங்கமான இந்தியா போஸ்ட் நாடு முழுவதும் 3,000 ஏடிஎம்களை (தானியங்கி பணப்பட்டுவாடா மையம்) அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இது தவிர 1.35 லட்சம் சிறிய ரக ஏடிஎம்களை தமால் நிலையங்களில் அமைக்க இந்தியா போஸ்ட் முடிவு செய்துள்ளது.
வங்கி தொடங்குவற்கு அனுமதி கோரி இந்தியா போஸ்ட் விண்ணப்பித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு வங்கி தொடங்க அனுமதிப்பது குறித்து ஆர்பிஐ பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் முதல் கட்டமாக 3 ஏடிஎம்களை சென்னை, பெங்களூர் மற்றும் டெல்லியில் பிப்ரவரி 5-ம் தேதி தொடங்க உள்ளதாக தபால்துறைச் செயலர் பத்மினி கோபிநாத் தெரிவித்துள்ளார்.
முதலாண்டில் 1,000 ஏடிஎம்கள் இந்தியா போஸ்ட் என்ற பெயரில் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.

Comments