கோமா பாதிப்பில் இருந்த இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் ஏரியல் ஷேரோன் இன்று காலமானார். அவருக்கு வயது 85. அவருக்கு ஓம்ரி, கிலாட் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இஸ்ரேல் நாட்டின் 11-வது பிரதமராக இருந்த ஏரியல் ஷேரோனுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கோமா நிலைக்குச் சென்றார்.
கடந்த 8 ஆண்டுகளாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள ஷீபா மருத்துவமையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர்து உடல் நிலை கடந்த 1-ஆம் தேதி முதல் மிகவும் மோசமடைந்தது. சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் காலமானார்.
Comments