அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியை மீரா சந்திரசேகரன் சிறந்த ஆசிரியருக்கான ராபர்ட் ஃபோஸ்டர் செர்ரி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மீரா சந்திரசேகரன் அமெரிக்காவில் இயற்பியல் மற்றும் வானியல் துறை பேராசிரியராக உள்ளார். அமெரிக்காவில் ஆசிரியர் பணியில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது இது. இதில் 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் தொகையும் அடங்கும். பெலர் பல்கலைக்கழகம் அவருக்கு இந்த விருதை அளித்துள்ளது.
இது தொடர்பாக மீரா சந்திரசேகரன் கூறியது: 2014-ம் ஆண்டுக்கான ராபர்ட் ஃபோஸ்டர் செர்ரி விருது எனக்கு கிடைத்துள்ளதை மிகப் பெரிய கவுரவமாகவே கருதுகிறேன் என்றார்
மீரா சந்திரசேகரன் சென்னை ஐஐடி-யில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தனது இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை மைசூர் எம்ஜிஎம் கல்லூரியில் 1968-ல் படித்தார்.
அமெரிக்காவில் மிசௌரி பல்கலைக்கழகத்தில் தனது ஆசிரியர் பணியைத் தொடங்கினார்.
2002-ம் ஆண்டில் சிறந்த முன்னாள் மாணவர் விருதை மீரா சந்திரசேகரனுக்கு ஐஐடி வழங்கியது.
Comments