அமெரிக்க இந்தியருக்கு முக்கிய பதவி

 அமெரிக்காவில் ஷமினா சிங் என்ற இந்திய பெண் தொழிலதிபருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் சமூக தேவை கழகத்தின் இயக்குநராக நியமித்து அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சித் தலைவர் நான்சி பெலோசியின் மூத்த ஆலோசகராக 2003_ம் பதவி வகித்த ஷமினா சிங் 2002_ம் ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தல் பிரசார த்தின் போது ரோன் கிர்க் என்பவருகான பிரச்சாரக் குழுவின் துணை மேலாள ராகவும் பதவி வகித்துள்ளார். 1999 முதல் 2001_வரை அமெரிக்காவிலுள்ள ஆசியா மற்றும் பசிபிக் பகுதியைச் சேர்ந்தவர் களின் விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபரின் ஆலோசனைக் குழு நிர்வாக இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார்.

Comments