கிரேக்க மாவீரன் அலெக்ஸாண் டரின் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்கியுள்ளன. அலெக்ஸாண் டருக்கு மூலிகையின் பூவில் இருந்து தயாரிக்கப்பட்ட மது கொடுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார் என ஒட்டாகோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுயுகம் 323-ல் உலகின் பெரும்பகுதியை வென்று, உலகின் மிகப்பெரிய ரோமப் பேரரசை நிறுவிய அலெக்ஸாண்டரின் மரணம் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.
தன் 32 வயதுக்குள் பெரும் போர்க்களங்களைக் கண்டு, மாவீரனாக வலம்வந்த அந்த மாசிடோனிய மாவீரன் 12 நாள்கள் மரணப்படுக்கையில் இருந்து உயிர் துறந்தார். விஷக்காய்ச்சலால் அவர் இறந்ததாகக் கூறப்படுகிறது.
வரலாற்றில் தனக்கென நிலை யான இடம் பிடித்த அம்மாவீரனின் இறப்பு எதனால் நிகழ்ந்தது என பலரும், பல்வேறு காரணங்களைச் சொல்லி வருகின்றனர்.
அவர் ஆர்சனிக் அல்லது ஸ்டிரைச்னைன் வகை விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக் கலாம் என்றொரு காரணமும் அதில் ஒன்று.
விஷக்காய்ச்சல் அல்லது விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார் என்ற இரு பெரும் காரணங்களே தற்போதுவரை அவர் மரணத் துக்குக் காரணமாகச் சொல் லப்பட்டாலும் இதில் எவையும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், ஒட்டாகோ பல்கலைக்கழக தேசிய விஷ ஆய்வு மைய ஆய்வாளர்கள் அலெக் ஸாண்டருக்கு வழங்கப்பட்ட மது விஷத்தன்மை கொண்டது என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர் லியோ செப் கூறியதாவது: கேளிக்கை விருந்தின்போது அலெக்ஸாண்டர் அதிக அளவில் மது அருந்துவது வழக்கம். அப்படியான விருந் தொன்றின்போது, அவருக்கு வெராட்ரம் ஆல்பம் எனப்படும் மூலிகைச் செடியின் பூவில் இருந்து தயாரிக்கப்பட்ட மது வழங்கப்பட்டிருக்கிறது.
வெராட்ரம் ஆல்பம் வொய்ட் ஹெல்போர் எனவும் அழைக் கப்படுகிறது. வெள்ளை நிறப் பூவை உடைய இந்த மூலிகை, கிரேக்க பழங்கால மருத்துவத்தில் வாந்தி எடுக்கத் தூண்டுவது உள்ளிட்ட வற்றுக்காகப் பயன்படுத்தப்பட் டுள்ளது.
இந்தப் பூவைக் கொண்டு நொதிக்கச் செய்யப்பட்ட மதுவே, அலெக்ஸாண்டரின் உயிரைப் பறித்திருக்கிறது.
மற்ற விஷங்கள் உடனடியா கக் கொன்றிருக்கும். ஆனால், அலெக்ஸாண்டர் மரணப்படுக்கை யில் 12 நாள்கள் இருந்தார். அவரால் நடக்கவோ, பேசவோ இயலவில்லை. மிகுந்த அவஸ்தைக்குப் பிறகு அவர் உயிர் பிரிந்திருக்கிறது என்றார் அவர்.
இருப்பினும், அலெக்ஸாண்ட ருக்கு எப்படி விஷம் கொடுக்கப் பட்டது என்பது புரியாத ஒன்று என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை, கிளினிக்கல் டாக்ஸிகோலஜி எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட் டுள்ளது.
Comments