நட்பு நாட்டுத் தலைவர்களை வேவுபார்க்க ஒபாமா தடை

நட்பு நாட்டுத் தலைவர்களை வேவுபார்க்க ஒபாமா தடை விதித்துள்ளார். பல்வேறு நாடுகளின் இணையதளம் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகளை அமெரிக்க உளவு அமைப்புகள் கண்காணித்து வருகின்றன. இத்திட்டம் குறித்து கடந்த ஒரு மாதகாலமாக பரிசீலனை நடைபெற்று வந்த நிலையில் வாஷிங்டனில் ஒபாமா பேசி யதாவது:
உலக அளவில் நமது கண்காணிப்பு மற்றும் வேவு பார்க்கும் நடவடிக்கைகள் கவனம் பெற்றன. இதை மனதில் கொண்டு தேசிய பாதுகாப்பு நோக்கம் இல்லாத பட்சத்தில் நமது தோழமை நாடுகளின் தலைவர்களை வேவு பார்க்கக் கூடாது என்று உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளிடம் தெரிவித்துள்ளேன் என்றார். எனினும் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாட்டு அரசுகளின் நோக்க ங்கள் பற்றி தகவல்களை  நமது உளவு அமைப்புகள் தொடர்ந்து திரட்டும் என்பதை தெளிவுபடுத்துகிறேன் ணன்றார்.

Comments