ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டியில், உலகின் நம்பர் 1 வீரர் ரஃபேல் நடாலை வீழ்த்தி, ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
சுவிட்ஸர்லாந்தின் வாவ்ரிங்காவுக்கும், ஸ்பெயினின் நடாலுக்கும் இடையே இன்று இறுதிச் சுற்றுப் போட்டி நடந்தது.
மிகுந்த விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், வாவ்ரிங்கா 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தினார்.
ஆட்டத்தின் இடையே காயம் ஏற்பட்டதன் காரணமாக, ரஃபேல் நடாலால் தொடர்ந்து வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத நிலை உண்டானது.
இந்த வெற்றியின் மூலம் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற வாவ்ரிங்கா, "ரஃபேலின் நிலையால் வருந்துகிறேன். அவர் மீண்டும் உடல் உறுதி பெறுவார் என நம்புகிறேன். அவர் மிகச் சிறந்த சாம்பியன்" என்றார்.
அதேவேளையில், "இன்று அதிர்ஷ்டம் என் வசம் இல்லாமல் போனாலும், சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முழு தகுதி வாய்ந்தவர் வாவ்ரிங்கா" என்றார் ரஃபேல் நடால்.
Comments