சண்முகம் IAS அகாடமி
- தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முதன் முறையாக பொது இடங்களில் ஏற்படக்கூடிய காட்டுத்தீ விபத்தை எதிர்கொள்வதற்கான ஒத்திகைப் பயிற்சியை உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏப்ரல் 18 அன்று நடத்தியுள்ளது.
- A.T.கெர்னே அமைப்பு வெளியிட்டுள்ள அந்நிய நேரடி முதலீட்டிற்கான நம்பிக்கைப் பட்டியல் 2017 ல் இந்தியா எட்டாவது இடத்தை பெற்றுள்ளது.
- இந்திய இரயில்வேயின் புதிய நிதி ஆணையராக BN மோகபத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
- செயற்கைக்கோள் அடிப்படையிலான விமான தடங்கண்காணித்தல் முறைமையினை 2018 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக பயன்படுத்தவிருக்கும் உலகின் முதல் விமனப்போக்குவரத்து நிறுவனம் என்ற பெருமையை மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
- ஐக்கிய நாடுகளவையின் சீன மொழி தினம் ஏப்ரல் 20. ஐக்கிய நாடுகளவையின் அலுவல் மொழிகளாக ஆங்கிலம் பிரஞ்சு ரஷிய சீன ஸ்பானீஷ் மற்றும் அராபிக் மொழிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments