current affairs 28-30

சண்முகம் ஐ  ஏ  எஸ்  அகாடமி 
நடப்பு நிகழ்வுகள் 
  1. அஹமதாபாத்தில் ஜிகா வைரஸ் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) உறுதிப்படுத்தியுள்ளது.
  2. உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை சிலியில் கட்ட கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
  3. ஆப்பிள் நிறுவனம் தென்கிழக்கு ஆசியாவின் முதல் கிளையை சிங்கப்பூரில் திறந்துள்ளது லூயிஸ் ஹாமில்டன் மிகவும் பிரபலமான கார் டிரைவர்களில் முதலிடம்
  4. உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஜெர்மனியில் டூசெல்டார்ஃப் நகரில் தொடங்குகிறது
  5. ஆசிய ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் புனேயில் தொடங்கியது
  6. பேஸ்புக்கில் அதிகம் பேர் பின்பற்றப்பட்ட உலக தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளதாக பேஸ்புக் தகவல் வெளியிட்டுள்ளது.
  7. மொரிஷியஸுக்கு இந்தியா 500 மில்லியன் டாலர் உதவி அளிக்கிறது
  8. இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் 5 முதல் 9 வரை நிதிசார் கல்வியறிவு வாரமாக அனுசரிக்க உள்ளது
  9. ஐஓசி இந்தியாவின் மிகவும் இலாபகரமான பொதுத்துறை நிறுவனமாகும்
  10. சிறந்த துறைமுகத்துக்கான கப்பல் அமைச்சக விருதை பெறுகிறது - பாரதீப் துறைமுகம்
  11. 2017 சுதீர்மான் கோப்பையை தென் கொரியா வென்றது
  12. சர்வதேச ஐ.நா. அமைதி காப்பாளர் தினம் - மே 29
  13. மெக்ஸிக்கோவில் நடந்த உலக பேரழிவு ஆபத்து குறைப்பு(Global Platform for Disaster Risk Reduction (GPDRR) பொதுக்கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது
  14. பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை ஹரியானா மாநிலம் அறிவித்தது
  15. மணிப்பூர் அரசு தமங்லாங் மாவட்டத்தின் டிலாங் கிராமம் மாநிலத்தின் பல்லுயிர் மரபுரிமை தளமாக அறிவித்துள்ளது.
  16. கர்நாடகாவில் சித்ரதுர்காவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) புதிதாக கட்டப்பட்ட ஏரோனாட்டிகல் டெஸ்ட் ரேஞ்ச் (Aeronautical Test Range) திறந்து வைக்கப்பட்டது.
  17. செபாஸ்டியன் வெட்டல், மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸை வென்றார்
  18. 2016 ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி புரஸ்கார் விருது சத்யபிரதா ரவுட் என்பவருக்கு வழங்கப்பட்டது.
  19. வங்காள விரிகுடாவில் மோரா என்ற வெப்ப மண்டல சூறாவளி தீவிரமடைந்துள்ளது. இது 2017 ஆம் ஆண்டில் வங்காள விரிகுடாவில் தோன்றிய இரண்டாவது சூறாவளி. முதல் சூறாவளி மாருதா.
  20. சர்வதேச போட்டியான சேட்லைட் உலகக் கோப்பை வாள்வீச்சு போட்டி ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்றது. இதன் ‘சேபர்’ பிரிவில் பங்கேற்ற தமிழக வீராங்கனை சி.ஏ. பவானி தேவி தங்கம் வென்றுள்ளார்.
  21. இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் மனிதர்களை அழைத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ராக்கெட்டிற்கு ஜி.எஸ்.எல்.வி மார்க் - III, எனப்பெயரிட்டுள்ளனர். இது வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் சோதனை நிகழ்த்தப்படயிருக்கிறது.
  22. ஆப்கானிஸ்தானில் முழுவதும் பெண்களால் இயக்கப்படும் தொலைக்காட்சி சேனல் \" ஜான் அல்லது மகளிர் தொலைக்காட்சி \" இந்த மாதம் ஒளிபரப்பத் தொடங்குகிறது
  23. நாட்டிலுள்ள கிராமப்புறங்களில் கழிப்பறை வசதிகளை மேம்படுத்துவதற்காக தர்வாஸா பேண்ட் என்ற புதிய பிரச்சாரத்தை அரசு தொடங்குகிறது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பிரச்சாரத்தை நடத்துகிறார்.
  24. மணிப்பூர் ஆளுநர் மற்றும் முன்னாள் சிறுபான்மை மந்திரி நஜ்மா ஹெப்டுல்லா ஜமியா மில்லியா இஸ்லாமி பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.1920 இல் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் முதல் பெண் வேந்தர்.
  25. மகாராஷ்டிரா திறன் மேம்பாட்டு துறை, பெரிய நிறுவனங்களுடன் தொடர்புகொள்வதற்கு மின்னஞ்சல் முகவரியைத் தொடங்கியது. email id : mahamaitri.sded@maha.gov.in
  26. உலகளாவிய சுற்றுலா வளர்ச்சியானது 4.6 சதவீதமாக இருந்தபோது இந்தியாவின் சுற்றுலா வளர்ச்சி 15.4 சதவீதத்தை அடைந்தது.
  27. ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா திருச்சியை அடுத்த திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி கோபால்சாமி தலைமை தாங்கினார்.
  28. கடந்த 2016-17 நிதியாண்டில் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்த நாடாக, சிங்கப்பூரைப் பின்னுக்குத் தள்ளி மொரீஷியஸ் முதலிடம் பிடித்துள்ளது.
  29. 2017-18 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.2% வளர்ச்சியடையும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
  30. பார்சிலோனாவின் லியோனல் மெஸ்ஸி நான்காவது முறையாக கோல்டன் ஷூ விருது வென்றார்
  31. பார்சிலோனாவின் லியோனல் மெஸ்ஸி நான்காவது முறையாக கோல்டன் ஷூ விருது வென்றார்
  32. கோவா மாநில அரசாங்கம் 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளது
  33. இந்தியா மற்றும் பிஜி நாடுகள் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றிய உடன்படிக்கை செய்துள்ளது
  34. விஞ்ஞானிகள் புதிய கண்ணாடி தவளை இனங்களை ஈகுவடாரில் அமேசானிய தாழ்நிலங்களில் கண்டுபிடுத்துள்ளனர் .
  35. மத்திய மனித வள துறை அமைச்சகம் ராகிங்குக்கு எதிராக மொபைல் அப்பிளிகேஷனை பல்கலைக்கழக மானிய குழு உதவியுடன் அறிமுகப்படுத்தியுள்ளனர்
  36. 2015 ஆம் ஆண்டிற்கான 26 பிரபல ஹிந்து கல்வியாளர்களுக்கு இந்தித் செல்வி சம்மன் விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்
  37. கேரளாவின் ஜார்ஜ் குரியன் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
         மேலும் படிக்கச் கிளிக்செய்யவும் http://tamilcurrentaffairs.shanmugamiasacademy.in/












Comments