சண்முகம் IAS அகாடமி
நடப்பு நிகழ்வுகள்
- NCTAD இன் உலக முதலீட்டு அறிக்கை 2017 படி, இந்தியா தொடர்ந்து அந்நிய நேரடி முதலீட்டிற்கான விருப்பமான நாடாகவே இருந்து வருகிறது .இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் நாடுகள் அமெரிக்கா, சீனா, இந்தியா.
- புதுடில்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் தேசிய மனித பால் வங்கி மற்றும் பாலூட்டும் ஆலோசனை மையம், இரண்டையும் சுகாதார செயலாளர் சி.கே. மிஸ்ரா திறந்து வைத்தார்.
- உலகின் முதல் \'ஏரோபோட்\'‘aeroboat’ இந்திய-ரஷ்ய கூட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது நிலம், நீர், பனி , மலைச்சரிவு போன்ற இடங்களிலும் பயணிக்கும்.
- இந்தியா 4 ஜி இணைய வேகத்தில் 74 வது இடத்தில் உள்ளது
- உத்தர பிரதேசத்தில் முகள்சாராய் ரயில் நிலையத்துக்கு பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் பெயர் சூட்டப்பட்டது.
- இந்திய ரிசர்வ் வங்கி தனது சமீபத்திய நாணயக் கொள்கையில் ரெபோ ரேட் விகிதம் 6.25 சதவீதமாகவும், எதிர் ரெபோ ரேட் விகிதம் 6 சதவீதமாகவும் அறிவித்தது.
- ஆக்சிஸ் பாங்க் லிமிட்டெட், உலக சுற்றுச்சூழல் தினத்தின் போது, மீளாய்வு செய்ய இயலும் பரிசு அட்டைகள் விநியோகம் செய்வதாக அறிவித்துள்ளது.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(Shanghai Cooperation Organisation) 17 வது உச்சிமாநாடு கசகஸ்தான் தலைநகரான அஸ்தானாவில் நடைபெறுகிறது.
- மூத்த பத்திரிகையாளர் வினோத் துவாவுக்கு மகாராஷ்டிராவின் பத்திரிக்கையாளர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதான RedInk வழங்கப்படுகிறது.
- அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்புச் சந்தை ஜப்பானை விஞ்சிவிடும் என்று பி.எம்.ஐ. ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகளிலேயே உள்கட்டமைப்புச் சந்தையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
- பண மதிப்பழிப்பு நடவடிக்கை நடைமுறையில் இருந்த காலத்தில், டில்லி நகர் 55 ஆயிரத்து, 665 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளது.
- உலக சமுத்திர தினம், ஆண்டுதோறும் ஜூன் மாதம் 8ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தீம், ‘Our Oceans, Our future’,
- அமெரிக்காவின் மசெசூட்ஸ் லிங்கன் ஆய்வகம் நடத்தும் இன்டர்நேஷனல் சயின்ஸ் அண்ட் என்ஜினியரிங் ஃபேர் எனப்படும் போட்டி, பள்ளி மாணவர்களுக்கான உலகின் மிகப்பெரிய அறிவியல் போட்டியாகக் கருதப்படுகிறது. இந்த போட்டியில் மூன்று சிறப்பு விருதுகளைப் பெற்ற பெங்களூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சாஹிதி பிங்கலியின் பெயர் புதிய கிரகம் ஒன்றுக்கு சூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிரென்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஹன் போபண்ணா மற்றும் கேப்ரியல் டேப்ரோஸ்கி ஆகியோர், ஜெர்மனியின் அண்ணா-லேனா க்ரோபேன்ட்ட் மற்றும் கொலம்பியாவின் ராபர்ட் பரா ஆகியோரை வீழ்த்தி கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றனர்.
- BRICS ஊடகங்களை வளர்ப்பதற்கு ஒரு மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
- உலகின் முதல் 200 பல்கலைக்கழகங்களில் இந்தியாவிலிருந்து ஐஐடி-டெல்லி, ஐஐடி-பாம்பே இடம் பிடித்துள்ளது.
- \'டிஜி யத்ரா\'- விமான பயணிகளுக்கு வழங்கப்பட்ட இணைய வசதி
- இந்திய ரயில்வே முதல் மனித வள வட்ட மேசை மாநாடு டெல்லியில் நடைபெற்றது .
- தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக, வால் மார்ட் சில்லறை நிறுவனம், பார்ச்சூன் இதழின் முதல் 500 நிறுவனங்களின் தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளது.
- தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போன்று கர்நாடகாவின் கம்பலா போட்டிக்கும் சட்ட அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது
- விஞ்ஞானிகள் மிகவும் வெப்பமான வெளிகிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் - KELT-9b
- மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர் பி கோவர்த்தன ரெட்டி காலமானார்
- புது தில்லியில் தேசிய உடல்நலம் தொகுப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் யோகா நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக நாடெங்கிலும் நூறு யோகா மையங்கள் அமைக்க அரசு முடிவு.
- வரலாற்று ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலின் தலைவரான பாசுதேவ் சாட்டர்ஜி கௌகாத்தியில் காலமானார்
- இந்தியாவும், தெற்கு - தெற்கு ஒத்துழைப்புக்கான ஐ.நா. அலுவலகமும் வளர்ந்து வரும் நாடு முழுவதும் நிலையான அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு கூட்டு நிதி ஒன்றை தொடங்கின.
Comments