சென்ற பிப்ரவரி மாதத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2017 ஏப்ரல் முதல் 2018 பிப்ரவரி வரையிலான காலத்தில் அதிகம் ஏற்றுமதி செய்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஃபால்டா (மேற்கு வங்க சிறப்புப் பொருளாதார மண்டலம்) முதலிடத்திலும், கொச்சின் இரண்டாவது இடத்திலும், விசாகப்பட்டினம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. அதிகளவில் இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்த நாடுகளாக இங்கிலாந்து, பெல்ஜியம், சிங்கப்பூர், சீனா, மலேசியா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

Comments