பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே19 ) ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். காஷ்மீரின் குரேஸ் பகுதியில் 330 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் கிஷன் கங்கா மின்சார திட்டம் மற்றும் ஸ்ரீநகர் வட்டச் சாலை திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து அனைத்து பருவ காலங்களிலும் ஸ்ரீநகர், கார்கில், லே பகுதிகளை இணைக்கும் ஜோஜிலா சுரங்கப்பாதை பணிகளைத் தொடங்கி வைத்தார். ”ஜம்மு காஷ்மீர் ரூ.25000 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகளால் வளர்ச்சி அடையப் போகிறது. இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும். 14 கிலோமீட்டர் தூரத்துக்கு அமையவுள்ள ஜோஜிலா சுரங்கப்பாதை, நாட்டிலேயே மிகவும் நீளமான சுரங்கப்பாதையாக இருக்கும். மேலும் ஆசியாவிலேயே மிக நீண்ட இரு திசை சுரங்கப் பாதையாகவும் இது இருக்கும்” என்றார் மோடி.
Comments