2016-17 நிதியாண்டில் இந்தியாவின் கரிம வேளாண் உணவு ஏற்றுமதி 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கரிம வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் சோயாபீன் மற்றும் கச்சா பருத்தி இணைந்து 50 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ளன. மேலும், தேயிலை, பருப்பு வகைகள் மற்றும் கம்பு ஆகியவையும் கணிசமான அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் கரிம வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் முக்கியச் சந்தைகளாகத் திகழ்கின்றன.

Comments