பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் வகையில் மனித உருவம் கொண்ட `ஹியூமனாய்டு' ரோபோக்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கான சோதனை முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை பெங்களூரில் நேற்று (மார்ச் 29) தொடங்கி வைத்துப் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ப்ரியங்க் கார்கே, "கெம்பா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவை பெங்களூரைச் சேர்ந்த சிரேனா டெக்னாலஜி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் வடிவமைத்துள்ளது. இது பயணிகளுக்கு தேவையான தகவல்களை அவர்களுக்கு விருப்பப்பட்ட மொழியில் தருகிறது. இது முழுக்க முழுக்க பெங்களூரில் தயார் செய்யப்பட்டது. |
Comments