சுவிட்சர்லாந்தை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி டேவிட் குடால், அந்நாட்டு அரசின் அனுமதியுடன் தன்னை தானே கருணைக் கொலை செய்துகொண்டு காலமானார். உயிரியல் துறையின் உலகின் மூத்த விஞ்ஞானியாக இருந்தவர் டேவிட் குடால். 104 வயதான இவர், வயது மூப்பை கருத்தில் கொண்டு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். பின்பு, அந்த முடிவை மாற்றி தன்னை கருணைக் கொலை செய்து கொள்ள சட்டப்படியான நடவடிக்கைகளில் இறங்கினார். பிரிட்டனில் பிறந்த டேவிட் குடால், உயிரியல் துறை உலகளவிலான பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். மேலும் ’ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா’ என்கிற அந்நாட்டின் உயரிய விருதை பெற்ற வெகுசில விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். மேலும், இந்த விருது பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தால் மறைந்த விஞ்ஞானி டேவிட் குடாலுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments